இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்படுகின்றது சமையல் எரிவாயுக்களின் விலை!
Friday, May 3rd, 2024இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அதன் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 3,940 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 70 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,582 ரூபாவாகும்.
2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 32 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 740 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கையில் இன்று (03.05.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 12.5 கிலோகிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோகிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,840 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 கிலோகிராம் எடையுள்ள லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 110 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,542 ரூபாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|