இன்று நள்ளிரவுமுதல் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை – பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!

இன்று நள்ளிரவுமுதல் சாதாரண தரப் பரீட்சைகள் முடிவடையும் எதிர்வரும் மார்ச் 10 ஆம்திகதிவரை பரீட்ச்சார்த்திகளுக்காக பிரத்தியேக வகுப்புகளை ஏற்பாடு செய்தல் மற்றும் நடத்துதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு பரீட்சை தொடர்பான கருத்தரங்கு, பயிற்சிப்பட்டறை, மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் என்பனவும் தடைசெய்யப்பட்டுள்ளது.
பரீட்சை வினாக்கள் தொடர்பான அல்லது அது சம்பந்தப்பட்ட சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகளை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பிரசுரித்தல் என்பவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 1911 என்ற துரித எண்ணுக்கோ அறிவிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
செப்டம்பர் 01 முதல் இலத்திரனியல் அடையாள அட்டை!
அடுத்த மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது நாடாளுமன்றம்!
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் - ஆசிய அபிவிருத்தி வங்...
|
|