இன்று தேசிய உணவு பாதுகாப்பு வாரம் ஆரம்பம்!
Monday, November 28th, 2016
தேசிய உணவு பாதுகாப்புவாரம் இன்று ஆரம்பிக்கப்படுகின்றது. இன்று முதல் ஒருவாரகாலத்துக்கு நாடுமுழுவதும் உள்ள சகாதார வைத்திய அதிகாரிகள் இந்த உணவு பாதுகாப்பு தொடர்பாக கண்காணிக்கவுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உணவு பாதுகாப்பு சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முறையின் பிரகாரம் உணவின் தரம் மற்றும் மோசடி தொடர்பாக இந்தவாரம் முழுவதும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதனடிப்படையில் உணவு வகைகளை தயார் செய்யும் ஹோட்டல்கள் சிற்றுண்டிச்சாலைகள் பேக்கரி மற்றம் தூர பயணம் மேற்கொள்ளும் பஸ் வண்டிகள் நிறுத்தும் பஸ் நிலைய சிற்றுண்டிச்சாலைகள் என்பன இதன்போது சோதனைப்படுத்தப்படவுள்ளன.
Related posts:
பொலிஸ் செய்திகளை வழங்க புதிய நடைமுறை!
குசல் பெரேராவிற்கு இழப்பீடு!
110 அரசாங்க நிறுவனங்களுக்கு விருது !
|
|