இன்று சர்வதேச வாய்ச் சுகாதார தினம் !

ac47d1ec60be3fa2b52ce0cad5180020_XL Monday, March 20th, 2017

நாட்டு மக்களின் 90 சதவீதமானோர் ஏதோவொரு வகையிலான வாய் நோயுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகளவு சீனியுடன் கூடிய உணவுகளை உட்கொள்ளல், முறையாக வாயை சுத்தம் செய்யாமை, வாய் சுகாதாரப் பாதிப்பிற்கு காரணமாகும் என்று இலங்கை பல் வைத்தியர் சங்கத்தின் துணைச் செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்னாயக்க தேரிவித்துள்ளார்..

அதிகளவில் வெற்றிலை மெல்லுதல், புகைத்தல் ஆகியன வாய்ச்சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்விடயங்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச வாய்ச் சுகாதார தினம் நாளை இடம்பெறவுள்ளது. இதுதொடர்பாக தெரிவிக்கையிலேயே அவர் இந்த வியத்தை குறிப்பிட்டார். ‘ஆரோக்கியமான வாழ்வுக்கு – வாய்ச் சுகாதாரத்தை முன்னெடுத்தல்’ என்பதே இம்முறை இதன் தொனிப்பொருளாகும்.

நாட்டில் வாயுடன் தொடர்புபட்ட நோய்களுக்கு உள்ளானவர்கள்  பெருமளவில் இருப்பதை காணக்கூடியதாக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களில் 65 சதவீதமானோர் வாய் சம்பந்தப்பட்ட நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 95 சதவீதமானோர் பல் ஈறுகளில் தொடர்புட்ட நோய்களுக்கு உள்ளாகியிருப்பதாக அமைச்சின் புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

முரசு கரைதல், வாய்ப் புற்றுநோய் மற்றும் சொத்தைப் பல் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டோர் பெருமளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 90 சதவிதமானோர் வாய் சம்பந்தப்பட்ட நோய்க்கு உள்ளாகியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இம்முறை சர்வதேச வாய் சுகாதாரம் தொடர்பான தேசிய வைபவம் பெல்மதுள்ள கன்கந்த தேசிய பாடசாலையில் சமீபத்தில் நடைபெற்றது.

சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை பல் வைத்தியர் சங்கம் என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன. சர்வதேச வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு ஆரம்ப பாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களின் வாய் சுகாதார பாதுகாப்புக்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.