இன்று கொழும்பில் ஆர்ப்­பாட்டம்!

Thursday, May 26th, 2016
தேசிய அர­சாங்­கத்­தினால் தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு பரிந்­துரை செய்­யப்­பட்ட நாள் ஒன்­றுக்கு 100 ரூபா வீத அதி­க­ரிப்பு தொகையினை வழங்­குவ­தற்கு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் இணக்கம் தெரிவிக்­கா­த­தை­ய­டுத்து அதற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் முகமாக தமிழ் முற்­போக்கு கூட்டணியினால் திட்­ட­மி­ட்டபடி இன்­றைய தினம் தலை­ந­கரில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள­தாக கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன் தெரி­வித்தார்.

தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு நியாய­மான முறையில் கிடைக்க வேண்­டிய சம்­பள அதி­க­ரிப்பை வலி­யு­றுத்­தியும் முதலா­ளிமார் சம்­மே­ள­னத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் முகமாகவும் முன்­னெ­டுக்­கப்­படும் இந்த ஆர்ப்­பாட்­டத்தில் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியில் அங்கத்துவம் பெறும் பங்­காளி கட்­சிகள் உட்­பட கட்­சியின் பாராளுமன்ற உறுப்­பி­னர்கள், அமைச்சர்கள் மகா­ண­சபை உறுப்­பி­னர்கள் என பல்­வேறு தரப்­பினர் கலந்து கொள்ளவுள்ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

Related posts: