இன்று அடிப்பிறப்பு தினமாகும்!

Saturday, July 16th, 2016

இன்று இந்துக்களின் சிறப்பு பண்டிகைகளில் ஒன்றான ஆடிப்பிறப்பு தினமாகும். இதையொட்டி ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இந்துக்களால் தமிழ் நாட்காட்டியின் ஆடி மாதம் முதலாம் நாள் ஆடிப்பிறப்பு தினமாக கொண்டாடப்படுகின்றது.

எமது முன்னோர்கள் சூரியனின் வடதிசை தென்திசை நோக்கிய மாறுதல்களின் அடிப்படையை கணித்து இந்த தினத்தை கொண்டாடியுள்ளனர். இதுவே இன்றும் தொடர்கின்றது.

இந்துக்களால் இத்தினம் தேவர்களுடன் தொடர்புபடத்தியும் கொண்டாடப்படுகின்றது. அதாவது தட்சணாயண காலத்தில் (இன்று) தேவர்களுக்கு இரவுப்பொழுது ஆரம்பமாகும் நாளாக கருதப்படுகின்றது.

இன்றிலிருந்து வெப்பங்கள் தணிந்து குளிர்காலத்தின் அரம்பம் தொடங்குவதன் ஆரம்ப நாளாகவும்இ விவசாயிகள் பயிர்களை பயிரிடுவதற்கான ஆரம்ப மாதமாகவும் கணித்து இம்மாதத்தை ஒரு வளமான காலத்தின் தொடக்க நாளாகவும் கருதுவதாக எமது முன்னோர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண இந்துக்களால் இன்றையதினத்தன்றில் ஆடிக்கூள் கொளுக்கட்டை  என்பவற்றை செய்து உறவினர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்வது வழமையான நிகழ்வாகும்.

இந்த அடிப்பிறப்பை பற்றி நவாலியூர் சோமசுந்தரப் புலவர்

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்த மானந்தம் தோழர்களே

கூடிப்பனங்கட்டி கூழும் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோர்களே…

என பாடி குறித்த பண்டிகையை சிறப்பித்துள்ளார்..

Related posts: