இனிப்புக் கலந்த பாக்கு விற்பனை! : வியாபாரிகளுக்கு ரூ.10,000 தண்டம்!

Sunday, February 3rd, 2019

இனிப்புக் கலந்த பாக்குப் பைக்கற்றுகளை விற்பனைக்கு வைத்திருந்த இரு வியாபாரிகள், தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டமையை அடுத்து அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் சின்னமடுப் பகுதியில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் இனிப்பு கலந்த பாக்குப் பைக்கற்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன என்று கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஜெகதாசன், ஜெயபிரதீப் ஆகிய இருவரும் இரு வர்த்தக நிலையங்களையும் சோதனைக்கு உட்படுத்தியபோது அங்கு தடை செய்யப்பட்ட இனிப்புக் கலந்த பாக்குப் பைக்கற்றுகள் நூற்றுக் கணக்கில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாக்குப் பைக்கற்றுகளை கைப்பற்றி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஒப்படைத்த சுகாதாரப் பரிசோதகர்கள் இருவருக்கும் எதிராக மன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து நீதிவானால் இவர்களுக்கு முறையே 4 ஆயிரம் ரூபா, 6 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது

Related posts: