இனவாதத்தை ஒழிக்க வேண்டும் – அமைச்சர்  தயாசிறி ஜயசேகர!

Thursday, August 3rd, 2017

நாட்டில் மீண்டும் இனவாதம் தலை தூக்குவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,“வடக்கில் மீண்டும் ஒரு பதற்றமான நிலைமையினை ஏற்படுத்தி, நல்லிணக்கத்தினைச் சீர் குலைப்பதற்கு ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
வடக்கில் தமிழ்த் தலைமைகளுக்குள் இனவாதமற்ற ஒரு தரப்பினரும், விடுதலைப் புலிகளின் கோரிக்கையினை முன்னிலைப்படுத்தும் இனவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு தரப்பினரும் இருக்கின்றனர்.

இவ்வாறான சம்பவங்களின் மூலம், மீண்டும் ஒரு பிரச்சினையைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர். இந்த இடத்தில் அரசாங்கம் என்ற வகையில் நாம் மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டும்.

இந்த விடயங்கள் நாட்டில் பாரிய பிரச்சினையைத் தோற்றுவிக்க வழிவகுக்கும். இதற்காக நாம் பொலிஸாருடன் இணைந்து சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளைத் தொடர்வதுடன், மறுபுறம் பொதுமக்களை நல்லிணக்கம் நோக்கி நகர வைப்பதிலும் முயற்சிக்கின்றோம்” என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Related posts: