இனந்தெரியாத குழுவால் வாகனங்கள் தீயிட்டு எரிப்பு! – யாழ். நகரில் சம்பவம்!!

Thursday, October 6th, 2016

யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோ, மோட்டார் சைக்கிள் என்பன நேற்று அதிகாலை தீயிட்டு எரிக்கப்பட்டன. யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதியில், வெதுப்பக குறுக்கு வீதியில் உள்ள வீடொன்றில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பல மோட்டார் சைக்கிள்களில் சென்ற கும்பலே தீ வைத்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கும்பல் மூன்று லீற்றர் பெற்றோல் கானில் பெற்றோல் எடுத்து வந்து ஊற்றித் தீ வைத்திருக்கக்கூடும் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.

தீப்பற்றி எரிவதை அவதானித்தோம். குரல் எழுப்பிக் கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்தோம். அப்போது தாக்குதலாளிகள் வாளால் விட்டுக் கேட் மீது தாக்கிவிட்டுத் தப்பிச்சென்றனர். – என்று வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தீயின் வெப்பத்தால் வீட்டின் கூரை உடைந்து விழுந்துள்ளது. தீயை நீண்ட நேர போராட்டத்தன்; பின்னர் வீட்டிலிருந்தோர் கட்டுப்படுத்தினோர். குறித்த வீடு கடந்த வாரம் ஸ்ரான்லி வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான ஒருவருடையது. தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து சாரதி அனுமதிப் பத்திரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

unnamed_05102016_kaa_cmy

Related posts: