இந்த ஆண்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படாது – பிரதமர்!

புதிய அரசியல் அமைப்பு இந்த ஆண்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.உத்தேச அரசியல் அமைப்பு திருத்தங்களை இந்த ஆண்டில் சமர்ப்பிக்கப்படாது என குறிப்பிட்டுள்ளார்.
புதிய தேர்தல் முறைமை மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை எனவும் இந்த நிலையில் புதிய அரசியல் அமைப்பினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், வரவு செலவுத் திட்ட விவாதங்களின் பின்னரே உறுதியாக அரசியல் அமைப்பு குறித்த யோசனையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வைரவிழா மலர் வெளியீடு
நாட்டை பசுமை பொருளாதார சமூகமாக மாற்றுவதற்கான ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் உருவாக்...
பரமேஸ்வராச் சந்தியில் கோர விபத்து – ஒருவர் பலி – ஆபத்தான நிலையில் ஒருவர்!
|
|