இந்திய மீனவர்கள் 17 பேர் கைது.!

அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் நேற்று பருத்தித்துறை கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நகப்பட்டிணம் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் பருத்தித்துறைக்கு கிழக்கே 25 கடல்மைல் தொலைவில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் கடற்படை பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
பருத்துறை கடலோரத்தில் சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த கடலோர காவற்படையினரால் இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மீன்பிடி விசைப்படகுகள் இரண்டும் சான்றுப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் என்பன காங்கேசன்துறை கடற்படைதளத்தில் தடுத்து வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை மேலதிக விசாரணையின் பின்னர் யாழ்.கடற்றொழில் நீரியல்வள அமைச்சில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|