இந்திய மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் – அரசாங்கம் அனுதாபம் வெளியிட்டுள்ளது!

Thursday, March 9th, 2017

இந்திய மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் மீனவர் ஒருவர் உயிரிழந்தமை பற்றியும் மேலும் சிலர் காயமடைந்தமை தொடர்பிலும் அரசாங்கம் அனுதாபம் வெளியிட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் பாதுகாப்பை இலங்கை முக்கியமாக கருதுகிறது. இது பற்றி அனுதாபம் வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு இந்த சம்பவத்துடன் இலங்கை கடற்படை தொடர்பு படவில்லை என்று முதல் கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. ஆனால் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்திய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விசாரணை நடத்துவதற்காக சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த சம்பவம் பற்றி ஆழ்ந்த அனுதாபம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் அரச தலைவர்களுடன் இந்த விடயம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அறிவித்துள்ளார்.

இதேவேளை சிறிய படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை இலங்கை கடற்படை முற்றாக நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: