இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

Thursday, May 12th, 2016

எல்லைதாண்டி மீன்பிடித்த போது தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்களை, கடற்படையினர் கைது செய்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களை மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குறித்த மீனவர்களில் வயது குறைந்த சிறுவர் தொழிலாளி ஒருவரும் அடங்குகின்றார்.

இந்த நிலையில் விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா கைது செய்யப்பட்ட 21 மீனவர்களில் 20 பேரை இன்று 11 ஆம் திகதி புதன் கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதோடு, வயது குறைந்த சிறுவர் தொழிலாளியை இன்று வரை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் குறித்த இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு விசாரனை மீண்டும் நேற்று விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது குறித்த 21 மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, குறித்த மீனவர்களில் 20 பேரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், வயது குறைந்த சிறுவர் மீனவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.

Related posts: