இந்திய பெருங்கடலின் வெப்பம் வேகமாக அதிகரிப்பு!

Thursday, May 11th, 2017

ஏனைய பெருங்கடல்களுடன் ஒப்பிடும் போது இந்திய பெருங்கடல் வெப்பமடையும் வேகம் அதிகரித்துள்ளதாக அன்டாட்டிக் மற்றும் பெருங்கடல் ஆய்வுக்கான தேசிய நிலையத்தின் பணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய பெருங்கடல் வேகமாக வெப்பமடைவதற்கான காரணம் என்ன? என்ற கேள்விக்கு இதுவரையில் பதில் எதும் இல்லை. இந்த விடயம் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வெப்பமான காலநிலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்திய பெருங்கடல் வெப்பமடையும் வேகம் மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது.

இதேவேளை, செய்மதி கண்காணிப்புகள், வெப்பநிலை அட்டவணைகள் மற்றும் ஏனைய தரவுகளில் இருந்து இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: