இந்திய – இலங்கை முதல்நாள் கலந்துரையாடல் இன்று!

Wednesday, October 5th, 2016

இலங்கை – இந்திய பிரதமர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று(05) புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.

நியூசிலாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று புதுடெல்லி சென்றடைந்துள்ளனர்.இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

இதன்போது இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் வகையிலான விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

modi-vs-ranil

Related posts: