இந்தியாவில் கற்கைநெறிகள்:  23இற்கு முன் பதிவு செய்க!

Thursday, July 20th, 2017

இலவச பல்துறைசார் கற்கை நெறிக்கான விண்ணப்பங்களை வடமாகாண சபை மூலம் இந்திய அரசு கோரியுள்ளது.

இந்தியாவில் நடைபெற இருக்கும் கணக்காய்வு, வங்கியியல், நிதி, தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் ஆங்கிலம், முகாமைத்துவம், கிராம அபிவிருத்தி, விசேடதுறை, தொழில்நட்பம், சுற்றாடல் மீள்சக்தி, கொழும்புத் திட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகிய துறை சார்ந்தவையாக இந்தக் கற்கைநெறிகள் இடம்பெறவுள்ளன.

இந்தப் பயிற்சிநெறிக்கான விண்ணப்பங்களுக்கு விமானச்சீட்டு, தங்குமிடம், பயிற்சிகால உதவித் தொகை அனைத்தையும் இந்திய அரசே பொறுப்கேற்கவுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வடமாகாகண மகளிர் விவகார மற்றும் தொழில்தறை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது

Related posts: