இந்தியாவிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய தீர்மானம்!

Thursday, March 5th, 2020

இந்தியாவிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் பெரிய வெங்காயத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இதற்கு இந்தியாவும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பெரிய வெங்காய தொகையை இறக்குமதி செய்யவுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் கூறியுள்ளார்.

Related posts: