இந்தியாவின் கள ஆய்வு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!

Tuesday, July 19th, 2016

பலாலி விமான நிலையத்தை  பொதுப் பாவனைக்காக பயன்படுத்துவது அல்லது பிராந்திய விமான சேவைகளுக்காக பயன்படுத்துவது தொடர்பில் இந்தியா போன்ற நாடுகளின் ஆலோசனைகளை பெற்று இலங்கையின் பிராந்திய விமான சேவைகளை மேற்கொள்வதில்  சாதகமான காரணிகளாக அமையும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

இவ்வாறான நகர்வுகளை  தேசிய பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லாத வகையிலும் பிராந்திய பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலுமே அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமானத்தளமாக பயன்படுத்துவது குறித்து கள ஆய்வை இந்தியா மேற்கோள்வதாக  ஊடகங்கள்   தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனவிடம் ஊடகங்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்து செய்வது தொடர்பிலும் பிராந்திய பாவனைக்காக பயன்படுத்துவது தொடர்பிலும் சிவில் விமான சேவைகள் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். கடந்த யுத்த காலகட்டத்தில் பலாலி விமான நிலையம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் இராணுவத்தின் கட்டுபாட்டின் கீழ் இராணுவ பயன்பாடிட்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்டது. சுமார் 1000 மீட்டர் பரப்பில் இருந்த இந்த ஓடுபாதைகளை 2500 மீட்டர்கள் வரையில் விஸ்தரிப்பது தொடர்பிலும் அதன் பிற்பட்ட காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் இப்போதும் அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வண்ணமே உள்ளது.

அதேபோல் பலாலி விமான நிலையத்தை  பொதுப் பாவனைக்காக பயன்படுத்துவது அல்லது பிராந்திய விமான சேவைகளுக்காக பயன்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. இது குறித்து ஆராய இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன. ஏனெனில் இந்தியா போன்ற நாடுகளின் பிராந்திய விமான சேவைகள் மிகவும் பலமானதாக காணப்படுகின்றன. ஆகவே அவர்களின் ஆலோசனைகளை பெற்று இலங்கையின் பிராந்திய விமான சேவைகளை மேற்கொள்வது சாதகமான காரணிகளாக அமையும்.

விமான சேவைகள் மாத்திரம் அல்ல உள்நாட்டு புகையிரத விஸ்தரிப்பு மற்றும் வடக்கு கிழக்கு வீதி விஸ்தரிப்பு தொடர்பிலும் இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். எவ்வாறு இருப்பினும் இவ்வாறு இந்தியாவின் மூலமாக விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இலங்கை சிவில் சேவைகள் அதிகார சபையின்கீலேயே அணைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதேபோல் இவ்வாறன நகர்வுகள் தேசிய பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லாத வகையிலும் பிராந்திய பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலுமே அரசாங்கம் மேற்கொள்ளும்  என்றார்.

Related posts: