இந்தியப் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பம் கோரப்படுகின்றது!

Tuesday, November 14th, 2017

இலங்கையில் வதியும் இந்திய வம்சாவளியினருக்கு குறுகியகால புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு இந்தியாவின் வெளிவிவகார அமைச்சு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. விண்ணப்ப முடிவுத் திகதி நவம்பர் 19 ஆம் திகதியாகும்.

“இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள்” என்ற வேலைத்திட்டத்தின் கீழ்25 நாட்களைக் கொண்ட குறுகியகால புலமைப்பரிசிலாக இது அமைந்துள்ளது. பொருளாதாரம், கைத்தொழில், கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், தொடர்பாடல், தகவல் தொழில்நுட்பம் முதலான துறைகளில் இது அமைந்துள்ளது.

இந்தியா அல்லது நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான, 19 – 30 வயதுடைய பட்டதாரிகளான ஆங்கில மொழியில் பரிச்சயமுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். ராஜஸ்தான் மாநிலத்திற்கான சுற்றுலா ஜனவரி 29 ஆம் திகதி முதல் பெப்ரவரி 22 வரை இடம்பெறும். மத்திய பிரதேசத்திற்கான சுற்றுலா பெப்ரவரி 12 முதல் மார்ச் 8 ஆம் திகதி வரை இடம்பெறும்.

Related posts: