யாழில்.இந்தியத் துணைத்தூதரகத்தின் பட்டிமன்றம்!

Wednesday, April 6th, 2016

யாழ். இந்தியத் துணைத் தூதரகம், வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு அமைச்சு ஆகியன இணைந்து சிறப்பு பட்டிமன்றம் ஒன்றை நல்லூர் சங்கிலியன் தோப்பில் எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 5.30 மணிக்கு நடத்தவுள்ளன.

சுதந்திர இந்தியாவின் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான முதலாவது அமைச்சர் கலாநிதி டீ.சு.அம்பேத்கார் அவர்களின் 125ஆவது பிறந்த தின நினைவு மற்றும் தமிழ் சித்திரை வருடப்பிறப்பு ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில் இந்த பட்டிமன்றம் நடத்தப்படவுள்ளது.

இந்தியாவிலிருந்து வருகை தரும் பிரபல பேச்சாளர்களான பட்டிமன்றம் ராஜா மற்றும் திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோர் இதில் கலந்துகொள்கின்றனர்.

இவர்களுடன் வடமாகாணத்தின் புகழ் பூத்த பேச்சாளர்களான முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், பேராசிரியர் தி.வேல்நம்பி, செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன், ந.விஜயசுந்தரம், இ.சர்வேஸ்வரா மற்றும் செல்வி ப.கதிர்தர்சினி ஆகியோரும் இப்பட்டிமன்ற விவாத அரங்கினில் தமது வாதங்களை முன்வைக்கின்றனர்.

மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு அவசியமானவை தொன்று தொட்டு வரும் பழமைகளா?, மாறிவரும் புதுமைகளா? என்னும் தலைப்புக்களில் விவாதம் இடம்பெறவுள்ளது

Related posts: