இதுவரை 71 பேர் பலி!

Sunday, May 22nd, 2016

கேகாலை அரநாயக்கவில் மேலும் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதை அடுத்து சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 497 தற்காலிக முகாம்களில் தற்போது இரண்டு இலட்சத்து 78 ஆயிரத்து 528 பேர் தங்கியிருப்பதோடு மொத்தமாக மூன்று இலட்சத்து 75 ஆயிரத்து 604 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.

எனினும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய 474 வீடுகள் முழுமையாக சேதமடைந்திருக்கும் அதேவேளை மூவாயிரத்து 674 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

landslides-affected-Aranayake05

as03

as02

as01

as

Related posts:

மோட்டார்ச் சைக்கிளில் வேகமாக வந்தவர்கள் துவிச்சக்கர வண்டியில் சென்ற யுவதியை மோதிவிட்டுத் தப்பியோட்டம...
பேருந்து கட்டணத்தில் மாற்றத்தை கொண்டுவர எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கப்படமாட்டது - போக்குவரத்...
மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் - அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறு...