இணைய தளங்களை முடக்கம் திட்டம் கிடையாது – ஜனாதிபதி

Sunday, March 6th, 2016

இணைய தளங்களை ஒடுக்கும் திட்டங்கள் எதுவும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இணைய தளங்கள் மற்றும் சமூக ஊடக வலைமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டைப் பின்பற்றி வருவதாக அண்மையில் ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இது குறித்து கொழும்பு ஊடகமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளது.

இதன்போது இணைய தளங்களையோ இணைய ஊடகங்களையோ கட்டுப்படுத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் சுலபமாக விரைவில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான ஓர் ஊடகமாக இணைய தளங்கள் காணப்படுகின்றன எனவும் அவற்றை ஒடுக்கும் திட்டம் எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts: