இணையவழி மூலம் வியாபார முகாமைத்துவ கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!
Friday, November 25th, 2016யாழ்.பல்கலைக்கழகத்தின் இணையவழி மூலம் வியாபார முகாமைத்துவமானி பட்ட BBA கற்கைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை யாழ்.பல்கலை திறந்த மற்றும் தொலைதூர கல்விச் சேவையின் பணிப்பாளர் பேராசிரியர் பி.நிமலதாசன் கோரியுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தின் 6ஆவது பிரிவிற்கான விண்ணப்ப இறுதித் திகதி 30.11.2016 என்பதாகும். விண்ணப்பங்களை www.jfn.ac.lk/codl என்ற முகவரியினூடக அனுப்பலாம். கற்கைநெறி இரண்டரை ஆண்டுகளைக் கொண்ட 3வருடமாகும். க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3பாடம் சித்தி அடைந்நதவர்கள் விண்ணப்பிக்காலம். கல்வி கட்டணம் 180,000ரூபா. 3கட்டங்களாக நிதியை பிரித்து வழங்கலாம். மேலதிக விபரங்களுக்கு 021 222 1106, 021 222 3612 என்ற தொலைபேசியினூடாக தொடர்பு கொள்ள முடியும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு !
அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்துவதற்கு 3 நாள் அவகாசம் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
வெள்ளம் ஏற்படும் அனர்த்த நிலை - தயார் நிலையில் படையினர் என விமானப்படை பேச்சாளர் தெரிவிப்பு!
|
|