இணையத்தளத்தை முடக்கிய மற்றொருவரும் கைது!

ஜனாதிபதியின் இணையத்தளத்தை முடக்கிய குற்றச்சாட்டில் மொரட்டுவையைச் சேர்ந்த 27 வயது மற்றுமொரு நபரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அத்துமீறி நுழைந்தமைக்காக கடுகண்ணாவையைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.president.gov.lk எனும் இணையத்தளத்தை முடக்கி அதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்பில் அவதூறான செய்திகளை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் இணைய குற்றங்கள் பிரிவுக்கு பொறுப்பான ஒரு விசேட குழு இவர்களைக் கைதுசெய்துள்ளது.
Related posts:
கிளிநொச்சி வளாகத்தில் போராட்டம்!
பேருந்தில் மரக்குற்றி கடத்திய மூவர் கைது!
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும் -...
|
|