இணுவில் பொது நூலகத்தின் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டுக் குருதிக் கொடை முகாம்!

இணுவில் பொது நூலகத்தின் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு வருடா வருடம் நடாத்தப்படும் குருதிக் கொடை முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(20-03-2016) நூலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
காலை-9 மணி முதல் ஒரு மணி வரை இடம்பெற்ற குறித்த குருதிக் கொடை முகாமில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் கலந்து கொண்டு குருதியைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் 41 பேர் கலந்துகொண்டு இரத்ததானத்தினை வழங்கி உயிர்காக்கும் உன்னத செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வீட்டுத்திட்டத்திற்கு 29 ஆயிரம் பயனாளிகள் விண்ணப்பம்!
யாழ். மாவட்டத்தில் இளைஞர் தினம் நடத்துவதற்கு ஏற்பாடு - யாழ். மாவட்டத் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி...
ஜப்பான் பாதுகாப்பு தலைவர் - ஜனாதிபதி சந்திப்பு !
|
|