இணக்க சபை உறுப்பினரை தாக்கியவருக்கு விளக்கமறியல்!

Thursday, December 22nd, 2016

இணக்கசபை ஒன்றில் இரு தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற விசாரணையின் போது இடையில் புகுந்து அடாவடியில் ஈடுபட்டு உறுப்பினரை தாக்கியவருக்கு எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற  பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கரவெட்டிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் காணிப் பிரச்சினை இணக்கசபை மூலம் தீர்ப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்ட போது 25 வயதுடைய குடும்பஸ்தர் இணக்க சபையினருக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் பதில் நீதிவான் முன்னால் முற்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

734cef_630231364c3a440d894bc2ad6caebb7a

Related posts: