இடையில் விலகியோருக்கு பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு!

Wednesday, November 30th, 2016

முப்படைகளில் இருந்தும் தப்பித்து சென்றவர்கள் மீண்டும் படைகளில் இணையவும், நீக்கிக்கொள்ளவும் அடுத்த மாதம் 1 ஆம் திகதியில் இருந்து 31ஆம் திகதி வரையில் அவர்களுக்கான பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை இதன் பின்னர் பொதுமன்னிப்பு காலம் வழங்கப்படாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுமன்னிப்புக் காலத்தில் அடையாளபடுத்திக்கொல்லாத படை வீர்கள் அதன் பிற்பட்ட காலத்தில் கைதுசெய்யப்படுவதுடன் அவர்களுக்கு இராணுவ சட்டத்தின் பிரகாரம் தண்டனை வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

sssssssssssss1

Related posts: