இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸார்  மீண்டும் சேவையில்!

Tuesday, May 9th, 2017

தமது நன்னடைத்தைக் காலத்தில் திருமணம் செய்தமைக்காகப் பதிவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட 149 பொலிஸார், சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க கேட்டுக்கொண்டதன் பிரகாரம், மீண்டும் பதவியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார், தமது நியமனத் திகதியிலிருந்து 3 வருடங்களுக்கு திருமணம் செய்வது, பொலிஸ் நடத்தைச் சட்டத்தின் பிரகாரம் அனுமதிக்கப்படுவதில்லை. உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் இருவர், ​பொலிஸ் கான்ஸ்டபிள்கள் 132 பேர், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் 13 பேர் மற்றும் பொலிஸ் சாரதி ஒருவருமே, இவ்வாறு மீளவும் பதவியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்

Related posts: