இங்கிலாந்து கடலில் மூழ்கி இலங்கை தமிழர்கள் 5 பேர் பலி!

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 5 பேர், இங்கிலாந்தில் உள்ள கடலில் மூழ்கி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பிராந்தியத்தின் கம்பர் சான்ட் கடற்கரையில் இருந்து இவர்களது சடலங்கள் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இறந்தவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசத்தில் அதிகளவு வெப்பநிலை நிலவுவதால் மக்கள் கூட்டமாக திரண்டு வந்து கடற்கரைக்கு வருகின்றனர். இந்நிலையில், கடலில் குளிப்பதற்காக சென்ற 5 பேரில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். சில மணித்தியாலங்களின் பின்னர் இருவர் மீட்கப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இங்கிலாந்து முழுவதும் கடலில் குளிக்கச் சென்ற 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் திங்கட்கிழமையும் இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறுதானிய பயிர்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல்!
குறைந்த பரிசோதனை மதிப்பீட்டால் நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை குறைவு என வெளியான செய்திக்கு சுகாதார அமைச...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட உத்தரவு - பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய...
|
|