“ஆவா” க்கு போட்டியாக “தாரா” !

Saturday, November 18th, 2017

வலிகாமம் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட ஆவா குழுவைத் தொடர்ந்து, வடமராட்சிப் பகுதியில் தாரா எனும் குழு பிரசித்தமடைய தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வடமராட்சியில் மேற்கோள்ப்பட்ட பல கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள மூவர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்த நிலையில்,  விசாரணைகளில், தாரா குழு எனும் கொள்ளை கும்பல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இக்கும்பலின் முக்கிய சந்தேக நபரொருவர் கைதாகி, பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இக்கும்பலின் ஏனையவர்களும் கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: