ஆவா குழு உறுப்பினர் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்?

Tuesday, November 15th, 2016

 

சாவகச்சேரியின் மட்டுவில் வடக்குப்பகுதியில் நீண்ட காலமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த ஆவா குழுவுடன் தொடர்புடைய நபர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் நேற்றுன’தினம்(13) சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர், சரணடைந்துள்ள நபர் நீண்ட நாட்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வருபவர் எனவும் இவர் பயங்கரவாத பிரிவினரின் கைது நடவடிக்கைக்கு அஞ்சியே சரணடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த சந்தேக நபரை இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

827710614Police_2

Related posts: