ஆறு.திருமுருகன் அவுஸ்திரேலியா பயணம்!

unnamed (1) Friday, April 21st, 2017

சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவுஸ்திரேலியா பயணமாகியுள்ளார்.

நாளை -22 ஆம் திகதி சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் சிட்னி அபயகரம் அறக்கட்டளையின் வெள்ளிவிழாவில்  சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் பொருட்டே அவர் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

மேலும் மறைமலையடிகள் நினைவுப்பேருரை வைபவம் மற்றும் உலக சைவப்பேரவை நடாத்தும் சான்றோர் விழா போன்ற விழாக்களில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் சைவத்தமிழ்ப்பணி தொடர்பாகவும் உரையாற்றவுள்ளார்.

அத்துடன் அவுஸ்திரேலியாவின் சிட்னி சைவமன்றத்தின் ஏற்பாட்டில் சிட்னி முருகன் ஆலயத்தில் இரு தினங்கள் சிறப்புரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


உரும்பிராயில் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறந்து வைப்பு!
முச்சக்கர வண்டி சாரதியின் உதவியால் கொலையாளியை கைது !
வடக்கு மாகாண பொதுச்சேவையின் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை!
குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு..!!
மின்சாரத் துண்டிப்பு தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்!