ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிறது விவசாயிகள் கூட்டமைப்பு!

nnnnnnnnnnnnnnn-141 Monday, July 17th, 2017

கோவணத்துடன் எதிர்வரும் 26ஆம் திகதியன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கான மானியம் மற்றும் இழப்பீடுகள் இல்லாமல் செய்தல், உரமானியத்தை உரிய முறையில் வழங்காமை, அறுவடைக்கு உரிய விலையைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, குறித்த இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய விவசாயிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடங்கிய நாடளாவிய ரீதியில் உள்ள சகல பிரதேசங்களையும் சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்பர் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கொழும்பு, கோட்டை ரயில்வே நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கவுள்ள குறித்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து, மகஜரொன்றையும் கையளிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார். இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு உரிய முறையில் பதிலளிப்பதற்கு அரசாங்கம் தவறும் பட்சத்தில், மாவட்ட ரீதியில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.


ஊர்காவற்றுறை ஆட்டோ சாரதிகளுக்கு வீதி ஒழுங்கு, முதலுதவிக் கருத்தரங்கு!
வேலணையில் குளத்தில் மூழ்கி 16 வயதுச் சிறுமி உயிரிழப்பு!
ஜனாதிபதி நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் வழிபாடு!
சேவையில் இணையுமாறு வடக்கு யுவதிகளுக்கு யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அழைப்பு!
மின்சாரம் தாக்கி துருக்கி பிரஜை பலி!
30595327_1734584803247266_6799777560008851456_n

போற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு!…