ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசை கவிழ்த்துவிடலாம் என எவரும் கனவுகாண வேண்டாம் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, July 10th, 2021

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசை ஆர்ப்பாட்டங்கள் மூலம் கவிழ்த்துவிடலாம் என எவரும் கனவுகாண வேண்டாம் என்று புதிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

நான் நாடாளுமன்ற உறுப்பினராக – அமைச்சராக பதவி ஏற்றவுடன் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை எதிரணியினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்பிட்ட ஒரு சிலரைக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசை கவிழ்க்க முடியாது.

நாட்டு மக்கள் மனதில் “தாமரை மொட்டுச்” சின்னமே இருக்கிறது. இந்த மொட்டுக்கு வாக்களித்து தான் நாட்டின் ஜனாதிபதியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடனான அரசையும் மக்கள் தெரிவு செய்துள்ளார்கள்.

எனவே பிரயோசனமற்ற இந்த ஆர்ப்பாட்டங்கள் கைவிட்டு நாட்டினதும் மக்களினதும் நலன் சார்ந்த அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிரணியிடம் வேண்டிக் கொள்வதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: