ஆரோக்கியமான உணவைப் பெற வீட்டுத் தோட்டங்களே சிறந்த வழி!

விவசாயத் திணைக்களம் அறிவுறுத்தல் ஆரோக்கியமான நோயற்ற வாழ்விற்கு வீட்டுத் தோட்டங்களை அமைத்து நஞ்சற்ற விவசாய செய்கைகளை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் வட மாகாணத்தில் விவசாயத்தின் மூலம் அதிகளவான வருமானத்தைப் பெற்றுக்கொண்ட மாவட்டமாக கிளிநொச்சி இருந்தது. ஆனால் யுத்தத்தின் பின்னர் நெற்செய்கை தவிர்ந்த ஏனைய விவசாயச் செய்கைகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை.
தற்போது இந்த மாவட்டத்திற்கு தேவையான பழ வகைகள், சிறுதானிய வகைகள் வெளி மாவட்டங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன எனவும் மாவட்ட விவசாயத்
திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் இரசாயனம் கலக்கப்பட்ட விவசாய உணவுப் பொருட்களே தற்போது விற்பனைக்கு வருகின்றன.
இந்நிலையில் ஒவ்வொரு குடும்பமும் தங்களுடைய வீடுகளில் வீட்டுத் தோட்டங்களை அமைத்து இரசாயன உள்ளீடுகள் பாவிக்காது நஞ்சற்ற விளை பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
வறட்சி காலங்களிலும் குறைந்தளவு நீரைப் பயன்படுத்தி இந்த வீட்டுத் தோட்டங்களை செய்ய முடியும்.இதற்காக பல்வேறு பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவி வருகின்றன எனவும் விவசாயத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|