ஆரம்பக் கல்வி டிப்ளோமா மாணவர்களை சேர்க்க விண்ணப்பம்!

Saturday, November 19th, 2016
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடத்தினால் 2016/2017 ஆம் கல்வியாண்டிற்குரிய முன்பிள்ளைப் பருவ மற்றும் ஆரம்ப கல்வியில் டிப்ளோமா நிகழ்ச்சித்திட்டத்திற்கு புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்ப முடிவுத் திகதி அன்று விண்ணப்பதாரிகள் 18வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரிகள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதலாம் மொழி, கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன் க.பொ.த உயர் தரப் பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியடைந்தவராகவோ அல்லது இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் முன்பள்ளி உயர்கல்விச் சான்றிதழ் நிகழ்ச்சித் திட்டப் பரீட்சையில் சித்தியடைந்தவராகவோ அல்லது இலங்கை தேசிய கல்வியியற் கல்லூரிகளினால் வழங்கப்பட்ட கற்பித்தலின் டிப்ளோமா சான்றிதழையோ அல்லது ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளினால் வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழையோ பெற்றிருத்தல் வேண்டும். இக்கற்கை நெறிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் 13.11.2016 தொடக்கம் 30.11.2016 வரை www.ou.ac.lk என்னும் இணையதளத்தினுள் பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்க முடியுமென யாழ்.பிராந்திய நிலைய உதவிப்பணிப்பாளர் மேலும் அறிவித்துள்ளார்.

teachers_kurukularaja_003

Related posts: