ஆயுள்வேத மருத்துவமனையை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

Sunday, February 3rd, 2019

நவாலி ஆயுள்வேத இலவச மருத்துவமனையின் சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவேறியுள்ளன. வலி.தென்மேற்கு நோயாளர்களின் நலன்கருதி வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் மருத்துவமனையை மீள ஆரம்பித்து உதவ வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நவாலி ஹேமலதா ஞாபகார்த்த ஆயுள்வேத மருத்துவமனை சீரமைப்புப் பணிகள் காரணமாக 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி முதல் மருத்துவ சேவையை இடைநிறுத்தியிருந்தது. மாகாண ஆணையாளரின் அறிவித்தலுக்கு அமைய மீள் சீரமைப்புப் பணிகள் தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

வடமாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் நோயாளர்களின் நலன்கருதி ஆயுள்வேத மருத்துவமனையை மீள ஆரம்பித்து உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: