ஆயுர்வேத கூட்டுத்தாபனம் தொடர்பாக ஆராய கோப் குழு தயார்!
Tuesday, October 4th, 2016ஆயுர்வேத கூட்டுத்தாபன அதிகாரிகளை பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டார்.
ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கூட்டுத்தாபனத்தின் தலைவர், நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்களிடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக அதன் உற்பத்திகள் முழுமையாக தடைப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த நிலைமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டார்.ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தெளிவைப் பெற்றுக் கொள்வதற்கும், எதிர்காலத்தில் இதன் செயற்திறனுடன் முன்னெடுத்துச் செல்வதற்குமான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தில் கடந்த நாட்களில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|