ஆனைக்கோட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையானது!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
இன்று அதிகாலை 3.40 அளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை பகுதியில் பேருந்து உரிமையாளரின் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
பேருந்து தீக்கிரையானமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் - கல்வி அமை...
தற்போதைய மாணவர்கள் இந்து சமய வரலாறுகளை கற்பதற்குரிய வழி முறைகள் காணப்படுவதில்லை - யாழ்ப்பாண பல்கலைக்...
146 நாட்களில் 239 கொலை சம்பவங்கள் பதிவு - பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல்!
|
|