ஆட்சேபனைகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் – பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

சமூக நலன்கள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சமூக நலன்கள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் தனிப்பட்ட முறையில் வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், நிகழ்நிலை(online) முறையின் மூலம் அந்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க முடியாத நபர்களுக்கு அதற்கேற்ப வசதிகள் செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமைமுதல் வெள்ளிவரை காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை 1924 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|