ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய நபர் கைது!

Thursday, September 8th, 2016

உலகளாவிய ரீதியிலான ஆட் கடத்தல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் ஒருவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளிலுள்ள பெண்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இவர் 52 வயதான ஒருவர் என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட வேளை சந்தேகநபரால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 பெண்களை, இந்தியப் பொலிஸார் விடுவித்துள்ளனர்.

இதேவேளை இந்த நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 2011ம் ஆண்டு முதல் இலங்கை, இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இந்த சட்டவிரோத வர்த்தகத்தை முன்னெடுத்து வருவதாக, இந்தியப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

arrest_07

Related posts: