ஆசிரியர் வருடாந்த இடமாற்றம் முதலாம் திகதி முதல் அமுல் –  இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்!

Saturday, December 17th, 2016

வடமாகாண ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றம் முதலாம் தவணையில் இருந்து அமுலுக்குவரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடக்கு மாகாணக்கல்வித் திணைக்களத்தில் இடமாற்றத்திற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் மேன்முறையீடு வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் தலைமையில் நேற்றைய தினம் இடமாற்றம் சபையில் பரீசிலிக்கப்பட்டது. இதன்போது வருடாந்த இடமாற்றத்திற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களில் இடமாற்றத்திற்கு தகுதியான அனைவருக்கும் 01.01.2017 முதல் கோரிய கல்வி வலயங்களுக்கு இடமாற்றம் வழங்குவதென தீர்மாகனிக்கப்பட்டுள்ளது.

ஒரு கல்வி வலயத்தில் இருந்து இன்னொரு கல்வி வலயத்திற்கு இடமாற்றத்திற்கு விண்ணப்பித்து இடமாற்றம் பெற தகுதியான அனைவரும் 2017 முதலாம் தவணை முதல் புதிய பாடசாலைகளில் பொறுப்பை ஏற்கவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடுகளோ, சிபாரிசுகளோ இன்றி முறையாக இடமாற்றங்கள் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் சில அரசியல் சார்ந்த சிபாரிசுகளுக்கூடாக விண்ணப்பிக்கப்பட்டிருந்த போதம் அவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படாமல் இடமாற்ற சபையின் தீர்மானங்களுக்கு அமைவாக முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இடமாற்றக் கடிதங்கள் கிடைக்காதவர்கள் நேரடியாக மாகாணக் கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறும் பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 Ceylon-Teachers-union-logo_CI

Related posts: