ஆசிரியர் சேவை நேர்முகத் தேர்வு வாக்காளர் பதிவுக்கு கிராம அலுவலரின் படிவத்தை முன்வைக்க முடியும்  – வடக்கு கல்வி அமைச்சு அறிவிப்பு!

17298523611_d259a81879 Wednesday, January 11th, 2017

இலங்கை ஆசிரியர் சேவைக்கான நேர்முகத்தேர்வின் போது தேருநகர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளரின் விவரங்களைக் குறிப்பிட்டுக் கொள்வதற்கான கிராம அலுவலரால் வழங்கப்படும் படிவத்தையும் முன்வைக்க முடியும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் இ.இரவீந்திரன் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சால் எதிர்வரும் 16ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதிவரை இலங்கை ஆசிரியர் சேவைக்குப் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. அதில் பரீட்சார்த்திகள் தமது பெயர் வாக்காளர் இடாப்பில் உள்ளமைக்கான அத்தாட்சியை உறுதிப்படுத்தப்பட்ட பிரித்தெடுப்பிதழை முன்வைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. எனினும் பிரதேச செயலாளரின் மேலொப்பத்துடன் கிராம அலுவலரால் வழங்கப்படும் தேருநர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளரின் விவரங்கள் அடங்கிய படிவத்தையும் நேர்முகத் தேர்வில் முன்வைக்க முடியும் என்ற வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

17298523611_d259a81879


30595327_1734584803247266_6799777560008851456_n

போற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு!…