ஆசிரியர் கல்வியியலாளர் சேவை பரீட்சை குறித்து குழப்பநிலை!

பரீட்சைத் திணைக்களத்தால் நேற்று நடத்தப்பட்ட இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை வகுப்பு மூன்றிற்கு ஆட்களைச் சேர்த்துக் கொள்வதற்குரிய போட்டிப்பரீட்சை 2015 (2016) தொடர்பாக குழப்பகரமான சூழ்நிலை தோன்றியுள்ளதாக விண்ணப்பதாரிகள் தெரிவிக்கின்றனர்.
2015ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலமான விளம்பரத்திற்கமைய மேற்படி பரீட்சை நடத்தப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
ஆனால், அரச சேவை ஆணைக்குழுவின் பணிப்புரைக்கமைய 2015 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30ஆம் திகதி 1939 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரசுரிக்கப்பட்ட இலங்கை பேராசிரியர் கல்வியியலாளர் சேவையின் 3அம் வகுப்பிற்கு சேர்த்துக் கொள்வதற்கான விளம்பரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான சகல எதிர்கால செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் 2016.10.14 ஆம் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.
முன்னுக்குப்பின் முரணான இவ்வறிவித்தல்கள் மூலம் பல்வேறு குழப்பங்களும் சந்தேகங்களும் விண்ணப்பதாரிகளிடையே தோன்றியுள்ளதால் கல்வி அமைச்சு இது விடயத்தில் தெளிவான அறிவித்தலை விடுக்க வேண்டுமென இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Related posts:
|
|