ஆசிய பசுபிக் வலயத்தில் ஆகக்கூடிய பயன்களை பெற்றுக்கொள்ள திட்டம் – பிரதமர்!

எதிர்காலத்தில் துரித அபிவிருத்தியை அடையவுள்ள ஆசிய பசுபிக் வலயத்தின் ஆகக்கூடிய பயன்களை பெற்றுக்கொள்வதற்கு திட்டம் வகுக்கப்படவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் உலகில் மிகவும் துரிதமாக அபிவிருத்தியடைவது ஆசிய பசுபிக் வலயமாகும். இந்த பின்னணியின் அடிப்படையில் இந்த பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கு ஆகக்கூடிய நன்மைகள் கிடைக்கும் என்றும் இந்த சந்தர்ப்பத்தை ஆக்க்கூடுதலான பயன்களைபெறுவதற்கு திட்டம் வகுக்கப்படவேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆசிய பசுபிக் மாநாட்டின் 15வது கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ள ஆசிய பசுப்பிக் நாடுகளின் முக்கிய தலைவர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.இன்று கொங்கொங் சர்வதேச மற்றும் கண்காட்சி மண்டபத்தில் இந்த மகாநாடு நடைபெறுவதற்கு முன்னர் கிறான்ட் ஹயற் (Grand Hyatt) ஹோட்டலில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
எதிர்கால பொருளாதார அபிவிருத்தி பயன்களை பெற்றுக்கொள்வதற்கு இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ளவேண்டிய முயற்சிகள் பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
தற்பொழுது தனித்தனியாக நாடுகளும் பிராந்திய ரீதியிலும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் இங்கு கூடுதலான கவனம் செலுத்தப்பட்டது. நாட்டு தலைவர்கள் தத்தமது நாட்டில் பொருளாதா திட்டங்கள் பற்றிய கருத்துக்களையும் இதன்போது பகிர்ந்து கொண்டனர். ஜேர்மன் நாட்டின் பிரதி அதிபர் சிக்மர் ஹெப்ரியல் (Sigmar Gabriel) தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.இதில் இலங்கைப் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அவுஸ்ரேலிய நிதியமைச்சர் மதியஸ் ஹோர்மன் (Mathias Cormann ) இந்தோனேசிய வர்த்தக அமைச்சர் எம் அறிஸ்தோர் லுக்கிதா கொங்கொங் வர்த்தக மற்றும் பொருளாதார அமைச்சர் கிரோகரி சோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related posts:
|
|