ஆசியாவில் இலங்கையே கல்வியில் முதலிடம் பெற்றுள்ளது.!

Friday, August 19th, 2016

ஆசிய பிராந்திய நாடுகளின் கல்வியில் இலங்கை முதலிடம் வகிப்பதாக யுனெஸ்கோவின் பணிப்பாளர் இரினா பெக்கோவா தெரிவித்துள்ளார்.

சிறந்த கல்விக்காக ஆசியரியர்களுக்குப் பயிற்சிகளை வழங்கவும் கல்வியமைச்சு பல வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளதாகவும் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கான பயணம் மேற்கொண்டுள்ள அவர் மீபேயிலுள்ள தெற்காசியாவிற்கான ஆசிரிய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் தெற்காசியாவிலுள்ள நாடுகளில் இலங்கையே கல்வியில் முன்னிலை வகிப்பதாகவும், பாடசாலைக்கு மாணவர் வரவு உயர்வாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts: