ஆங்கிலமொழி உயர்தர கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கலாம்!

Friday, November 10th, 2017

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தால் உயர் தொழில்துறை தொடர்பாடலுக்கான ஆங்கில மொழி உயர்தரச் சான்றிதழ் கற்கைநெறி 2017/2018 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்தக் கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயதை பூர்த்தி செய்திருப்பதுடன் க.பொ.த சாதாரணதரத்தில் ஆறு பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.

இந்தக் கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கவிருக்கும் விண்ணப்பதாரிகள் www.ou.ac.lk என்ற இணையத்தள முகவரி ஊடாக எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் எனவும் யாழ்ப்பாணப் பிராந்திய நிலைய உதவிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Related posts:


இரசாயன உரம் தொடர்பில் பிழையான ஆலோசனைகளின் அடிப்படையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது - ஆலோசனை வழங்...
இறக்குமதி செய்யப்பட்டுள்ள சமையல் எரிவாயுவின் தரம் குறித்து ஆராய நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த ...
இலங்கையர் அல்லாதோர் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் விசா கால எல்லை 5 வருடங்களாக...