ஆங்கிலமொழி உயர்தரச் சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
Friday, December 23rd, 2016இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தினால் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கான உயர் தொழிற்துறை தொடர்பாடலுக்கான ஆங்கிலமொழி உயர்தரச் சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கற்கை நெறியை மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரி 18 வயது அதற்கு மேற்பட்டவராக இருப்பதுடன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம்-11 ஆம் திகதி வரை WWW. Ou.ac.lk எனும் இணையத் தளத்தின் ஊடாகப் பெற்று விண்ணப்பிக்க முடியுமென யாழ்.பிராந்திய நிலைய உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஊர்காவற்துறை சிறுமி தொடர்பில் விசாரணை!
நீதிமன்றிலிருந்து கைதி தப்பியோட்டம்!
சைட்டத்தை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கை!
|
|