அவுஸ்திரேலியா செல்ல அனுமதி கோரும் யோசித்த!

Saturday, May 20th, 2017

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸ, வெளிநாடு செல்ல அனுமதி கோரியுள்ளார்.

குறித்த மனு இந்த மாதம் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பணச்சலவை சட்டத்தின் கீழ்,முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இதன் போது,வெளிநாடு செல்வதற்கு யோசித்தவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே,மருத்துவ சிகிச்சைகளுக்காக இரண்டு மாதங்கள் அவுஸ்திரேலியா செல்ல அனுமதி கோரி யோசித்த,கொழும்பு மேல் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

Related posts: