அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற சாரதிக்குத் தண்டம்!

Friday, March 9th, 2018

வழித்தட அனுமதிப்பத்திரமின்றி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று 12 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டதெனத் தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி பொலிஸார், வழித்தட அனுமதிப்பத்திரமின்றி அளவுக்கு அதிகமான பயணிகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றார் என்ற குற்றச்சாட்டுடன் வாகனச் சாரதி ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வழக்கினை விசாரித்த நீதிவான் வழித்தட அனுமதிப் பத்திரமின்றி பயணிகளை ஏற்றிச் சென்றமைக்கு 10 ஆயிரம் ரூபாவும் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமைக்கு 2 ஆயிரத்து 500 ரூபாவுமாக 12 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related posts: